இன்றைய நாள்: பெப்ரவரி 20 – வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 20 - வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

பெப்ரவரி 20 (February 20) கிரிகோரியன் ஆண்டின் 51 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 314 (நெட்டாண்டுகளில் 315) நாட்கள் உள்ளன.

வரலாற்று நிகழ்வுகள்:

  • 1472 – இசுக்கொட்லாந்து அரசியின் திருமணத்திற்காக ஓர்க்னி மற்றும் செட்லாந்து தீவுகளை நோர்வே நாடு இசுக்கொட்லாந்துக்கு வரதட்சணையாக வழங்கியது.

  • 1547 – ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார்.

  • 1627 – யாழ்ப்பாணத்தைத் தாக்கிய மிக மோசமான சூறாவளியில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.

  • 1798 – திருத்தந்தை ஆறாம் பயஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

  • 1818 – இலங்கையின் கண்டிப் பிரதேசத்தில் பிரித்தானிய அரசால் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

  • 1835 – சிலியின் கன்செப்சியான் நகரம் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அழிந்தது.

  • 1877 – சாய்கோவ்சுக்கியின் உலகப் புகழ்பெற்ற ‘அன்ன ஏரி’ (Swan Lake) பாலே நடனம் மாஸ்கோவில் முதன்முதலில் மேடையேறியது.

  • 1935 – அந்தாட்டிக்கா கண்டத்திற்குச் சென்ற முதல் பெண் என்ற சாதனையை டென்மார்க்கின் கரொலைன் மிக்கெல்சன் படைத்தார்.

  • 1946 – இலங்கைக்கு முதன் முதலாக இரட்டைத் தட்டுப் பேருந்து (Double Decker Bus) கொண்டு வரப்பட்டது.

  • 1962 – மேர்க்குரித் திட்டத்தின் கீழ் ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி வந்து, பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.

  • 1986 – சோவியத் ஒன்றியம் மீர் (Mir) விண்கலத்தை ஏவியது; இது 15 ஆண்டுகள் புவியின் சுற்றுவட்டத்தில் நிலை கொண்டிருந்தது.

  • 1987 – அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து இந்தியாவின் தனி மாநிலமாகியது.

  • 1988 – நகர்னோ-கரபாக் பிரதேசம் ஆர்மீனியாவுடன் இணைய முடிவு செய்தது; இது பின்னர் பெரும் போருக்கு வழிவகுத்தது.

  • 2009 – கொழும்பில் வான்படைத் தலைமையகத்தைத் தாக்க வந்த விடுதலைப் புலிகளின் இரண்டு தற்கொலை வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

பிறப்புகள்:

  • 1844 – லுட்விக் போல்ட்ஸ்மான், புகழ்பெற்ற ஆத்திரிய இயற்பியலாளர்.

  • 1876கா. நமச்சிவாய முதலியார், தமிழகத்தின் மிகச்சிறந்த தமிழறிஞர் மற்றும் பேராசிரியர்.

  • 1878சி. கே. சுப்பிரமணிய முதலியார், பெரியபுராண உரையாசிரியர் மற்றும் தமிழறிஞர்.

  • 1901 – பொபிலி அரசர், சென்னை மாகாணத்தின் 6-வது முதலமைச்சர்.

  • 1925 – கிரிஜா பிரசாத் கொய்ராலா, நேபாளத்தின் முன்னாள் பிரதமர்.

  • 1951 – கார்டன் பிரவுன், ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர்.

  • 1986 – கலையரசன், தமிழ்த் திரைப்பட நடிகர்.

  • 1988 – ஜியா கான், இந்தியத் திரைப்பட நடிகை.

  • 1990 – ஆதி வேங்கடபதி (Hiphop Tamizha), பிரபல தமிழ்த் திரைப்பட இசைக்கலைஞர்.

இறப்புகள்:

  • 1896 – ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் மற்றும் புலவர்.

  • 1907 – ஆன்றி முவாசான், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர்.

  • 1950 – சரத் சந்திர போசு, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் நேதாஜியின் சகோதரர்.

  • 1960வை. மு. கோதைநாயகி, புகழ்பெற்ற தமிழகப் புதின எழுத்தாளர்.

  • 2001 – யோகி ராம்சுரத்குமார், இந்திய ஆன்மிகத் துறவி.

  • 2008 – டி. ஜி. எஸ். தினகரன், பிரபல கிறித்தவ இறைப்பணியாளர்.

  • 2011மலேசியா வாசுதேவன், மிகச்சிறந்த தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர்.

  • 2012 – எஸ். என். லட்சுமி, தமிழ்த் திரைப்பட மற்றும் நாடக மூத்த நடிகை.

சிறப்பு நாள்:

  • சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice)


தகவல் உதவி: விக்கிப்பீடியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!