பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சை – 2026 (திருத்தப்பட்ட அறிவித்தல்)

பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சை - 2026 (திருத்தப்பட்ட அறிவித்தல்)

இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-I (வகுப்பு 3 – தொகுதி I) இற்கு 23,000 இற்கும் அதிகமான பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான திருத்தப்பட்ட அறிவித்தலுக்கு (Amendment Notice) அமைவாக விண்ணப்ப முடிவுத் திகதிகள் மற்றும் மேலதிக விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

பதவி மற்றும் வெற்றிட விபரங்கள் தகவல்கள்
மொத்த வெற்றிடங்கள் 23,344
பரீட்சைப் பிரிவு திறந்த மற்றும் வரையறுக்கப்பட்ட (Open & Limited)
பாடசாலை வகை தேசிய மற்றும் மாகாண பாடசாலைகள்
விண்ணப்ப முடிவுத் திகதிகள் இறுதித் திகதி
வரையறுக்கப்பட்ட (Limited) பிரிவு 2026.02.19 (இன்னும் 2 நாட்களே உள்ளன)
திறந்த (Open) பிரிவு 2026.03.05
விண்ணப்பிக்கும் முறை Apply Online


விண்ணப்பதாரிகளுக்கான முக்கிய குறிப்பு:

  1. முடிவுத் திகதி:
    வரையறுக்கப்பட்ட (Limited) போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பவர்கள் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை இணையவழியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

  2. திருத்தங்கள்:
    வயது எல்லை மற்றும் ஏனைய தகைமைகள் தொடர்பாக வெளியாகியுள்ள புதிய திருத்தங்களை வர்த்தமானி ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

  3. விண்ணப்பம்:
    பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.


  • Limited (வரையறுக்கப்பட்ட) பிரிவு என்பது ஏற்கனவே அரச சேவையில் உள்ளவர்களுக்கானது.

  • Open (திறந்த) பிரிவு என்பது புதிதாக வேலை தேடும் பட்டதாரிகளுக்கானது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!