ஒரு வானவில் போலே 19

ஒரு வானவில் போலே - 19

தொடர்கதை பாகம் 19

‘ I am sorry Kathir…. நெருக்கம் அதிகமானால் பெயர் சொல்லும் போது அது அன்பின் ஆழத்தை குறிக்கிது….. உண்மையை சொல்கிறேன் நான் தமிழ் கத்துக்க விரும்பினது செல்விக்காகவும் உனக்காகவும் தான்….. எனது பத்துவயதில் நடந்த விபத்துக்கு பிறகு நீ என்னோட மறக்க முடியாத நினைவு ஆகினாய்! 14 வயதில் மறக்க முடியாத உணர்வும் ஆகிவிட்டாய்….. வெட்கத்தை விட்டு செல்லனும் Feelings are more powerful than knowledge….. நீ உன்னோட Love feeling கை வெளிப்படுத்தினதில இருந்து….

You occupied my knowledge and

step by step I fell down too…. ம் இப்போ நான் நானாக இல்லை! ஆனால் இது Wrong னு தெரியிது! but I can’t recover me! 

என்னோட Daddy நிறைய சொல்லி தந்திருக்கார்….. அது புரியுது ஆனா உனக்காக மீறுவது தப்பில்லைன்னு ஏதோ ஒன்னு எனக்குள்ள சொல்லுது!…..

நீ அருகில் இருக்கும் போது இன்னும் நெருங்கனும் போல இருக்கு!

ஏன் Love பண்றதா சொன்னாய்!? 

I have to go tomorrow….. எப்படி நான் போவது? வேறுவழியில்லை. 

wait Until the situation lends a hand

அடுத்தது Daddy யிடம் சொல்லிவிட்டேன்.  

அவர் Age disorder என்றுவிட்டு நிறைய சொன்னார்…. I think some times he Adviced you too….

ஆனால் Education ரெண்டு பேருக்கும் முக்கியம்….

சரி இறுதியா உனது கேள்விக்கு எனது பதில்… I Love you Kathir’ 

என்று அந்த Walkman player ல் record பண்ணியிருந்தாள்.

என்னிடம் சொல்லமுடியாத விடயங்களை கொட்டி தீர்த்திருந்தாள். எனக்கு தலைகால் புரியாத சந்தோசம்….. வானத்தில் பறப்பது போல ஒரு feeling…. பசி தாகம் உறக்கம் எதுவும் வரவில்லை. அடடா! இதே போல காதலை ஏற்கவில்லை என feel பண்ணிய போதும் பசி தாகம் உறக்கம் வரவில்லை! ஏறத்தாழ ஒரு குடிகாரன் போன்ற நிலைதான்! அவன் கவலைக்காகவும் குடிப்பதாக சொல்வான்! சந்தோசத்துக்காகவும் குடிப்பதாக சொல்வான்! இப்படி சில உணர்ச்சிகள் ஒரே மாதிரியாக வரும். இந்த காதல் போதைக்கு வலிமையூட்டவே எங்களுக்காக பல சினிமா பாடல்கள் வந்தது போலவும் அப்போது இருந்திச்சு……..

“அண்ணே! ரொம்ப சந்தோசமா இருக்கே? ஆனா நீ படிப்பில சொதப்பிட கூடாதுன்னு அடிக்கடி சொல்லுவாள்.” 

என்ற தங்கையை பார்த்து ஆம் என்ற விதமாக தலையசைத்தேன். ஆனால் காலமும் சூழ்நிலையும் தனது விளையாட்டை வேறு வகையில் தொடங்கியது. யுத்த பிசாசு எங்கள் நம்பிக்கைகள் மீதும் எதிர்பார்ப்புகள் மீது தனது கோர தாண்டவத்தை ஆடத் தொடங்கியது.

“தனபாலன் இனி இங்கால வர ஏலாதாம்… விமானப் படையில வேலை செய்யிறதால தொழில விட்டுப்போட்டு வரச் சொல்லி இயக்கத்தால சொல்லி இருக்கினம்…. அவன் சிங்கள பெட்டைய முடிச்சதால அப்படி வர ஏலா தென்டு சொல்லிட்டானாம். சாதி சனம் சம்பிரதாயம் பார்க்காம அவர்ட இஷ்டப்படி நடந்ததுக்கு நல்லா வேணும்” என அப்பா அஜந்தாவின் Daddy யை பற்றி சொல்லும் போது அருகில் இருந்த நான் திடுக்கிட்டேன்!

“அவள் சிங்களமா இருந்தாலும் எவ்வளவு குணமானவள். நல்லா தமிழும் கதைப்பாள். ஒவ்வொரு leave க்கு வந்தவயல் இனி வரமாட்டினம்” என அம்மா சொல்ல தங்கை எனது முகத்தை பார்த்தாள். எனக்கும் தூக்கிவாரி போட்டிச்சு. ஆனாலும் அதற்கு பிறகும் எங்களுக்கிடையில் கடிதப் போக்குவரத்து மட்டும் இருந்திச்சு. ஒரு முறை வந்த கடிதத்தில் அதிர்ச்சியான விடயம் இருந்திச்சு…. Grandpa, Grandma… அதாவது Hitler யும் அவரது மனைவியையும் தமயந்தி அக்கா கொழும்புக்கு எடுக்க போவதாகவும். இந்த வீட்டையும் விற்கப் பார்ப்பதாகவும். அதில் இருந்திச்சு. கவலை அழுகை இயலாமை இப்படி எல்லாவற்றையும் அஜந்தா கொட்டி தீர்த்திருந்தாள். 

தொடரும்…..

எம்.யூ.அப்துல் ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!