ஒரு வானவில் போலே 17

ஒரு வானவில் போலே - 17

தொடர்கதை பாகம் 17

‘அப்படின்னா…. நீங்க கேட்டதற்கு நான் Positive reaction தந்தால் மட்டும் தான் எங்கள் friend Ship Real ஆகிடுமா?’ என அவள் கேட்டது எனக்கு repeat ஆகி வந்திட்டே இருந்திச்சு…. அவள் என்னை நெருங்கி வந்தது friend Ship நான் அவளை நெருங்க நினைத்தது Love…. இந்த இரண்டும் இரு சமாந்திரக் கோடுகள் போல  பட்டது. இரு சமாந்திர கோடுகளை ஒரு குறுக்கோடி இணைக்கும். அந்த குறுக்கோடி தான் சமரசம். தவிர ஒரு புள்ளியில் இரண்டும் சந்திக்கும் வாய்ப்பே இல்லை. அதாவது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில friend Ship மூலம் Love வரலாம் Love மூலம் friend Ship வரலாம்; ஆனால் இந்த இரண்டும் ஒன்றில்லாமல் ஒன்று இருக்கவும் கூடும் ஆனால் இரண்டும் இணைந்தால் ஒரு பலமான புதிய அர்த்தம் கிடைக்கும். இணையாவிட்டால்…. Two parallel lines traveling without any meaning are a sign of meaninglessness. என புரிய எனக்குள் சிரித்துக் கொண்டேன். இதை அவளிடம் எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என தீர்மானிச்சேன்.

“அண்ணே! அஜந்தா உன் கூட பேசனும்னு சொன்னா….” என்ன தங்கை கூறவும் நிமிர்ந்து பார்த்தேன். அவளும் வந்திருந்தாள். அப்பா வேலைக்கு போயிருந்தார். அம்மா சந்தைக்கு போயிருந்தா. முன் Hall ல் கதவு திறந்திருக்க தங்கைக்கு முன் இருவரும் நின்றோம். இருவருக்கும் பேச வரவில்லை. யார் மௌனத்தை உடைப்பது? அவளே அன்றும் முந்திக் கொண்டாள்…..

“ம் கோபம் இருந்தால் அடியுங்க! ஆனா கோபம் காட்டாதீங்க” 

என்றவாறு இடது கையை நீட்டினாள். உள்ளங்கையில் ஒரு கல்லு இருந்தது. அதை பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்திச்சு.

“I don’t want to hit you. But I want to take place in your heart” என்றேன். அதற்கு….

” அதை Love என்ற வார்த்தையை சொல்லி நிரூபிக்கும் வயதல்ல இது. Your top has curiosity but it is friendly” என்றவள் கூறவும்

“Two parallel lines traveling without any meaning are a sign of meaninglessness” . அதாவது இருசமாந்திர கோடுகள் தன்பாட்டில் பயணிப்பது அர்த்தமற்றது. என்றேன். 

“சரி இப்போ உங்க காதலை நான் ஏற்றுக் கொண்டால் அடுத்ததாக என்ன செய்வீங்க?” என்ற கடினமான கேள்வி அவளிடமிருந்து வந்திச்சு.

 

உண்மையில் காத்திருப்பது தவிர வேறு வழியில்லை. அல்லது திருட்டு தனமாக உணர்ச்சிகளை அனுபவிப்பது! தவிர வேறு என்ன செய்ய முடியும். ஒழுக்கம் மற்றும் சமூக விழுமியங்களை மதித்த நிலை அங்கே இருக்காது. என்பது புரிஞ்சிச்சு. ஆனால் அவளது கேள்விக்கு அவளே பதிலையும் இவ்வாறு தந்தாள்….

“Emotion is not the only solution, knowledge and skills must be intertwined அதனால education ல forecast பண்ணுங்க. அதுவரையும்….. Parallel lines are waiting”

இந்த வார்த்தைகள் எனக்குள் ஆழமாகவே பதிந்தது. உணர்ச்சி மட்டுமே தீர்வு அல்ல, அதனுடன் அறிவும் திறமையும் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும். அதுவரை சமாந்திரக் கோடுகள் காத்திருக்கும். என்ற பதில் அறிவு பூர்வமாக இருந்திச்சு. ஆனால் காலமும் சூழ்நிலைகளும் அதற்கு இடங் கொடுக்குமா? என்ற இன்னொரு பக்கமும் எமக்கு புரியாமல் அங்கிருந்தது.

“சரி we are friends” 

என்றேன்…. உடனே வலது கையை நீட்டி  ஏதோ Sweet னை எனக்கு தந்தாள். ஒரு கையில் கல்லும் மறு கையில் Sweet ம் கொண்டு வந்திருக்கிறாள். அதுதான் அன்று மதுபாசினி தந்தது. அதே சுவையானது. 

தொடரும்….

எம.யூ.அப்துல் ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!