ஒரு வானவில் போலே - 13
தொடர் கதை பாகம் 13
அந்த area முழுவதும் நம்பிய தேவன் பூசாரிக்கும் தமயந்தி அக்கா மீது புகுந்த பேய்க்கும் இடையில் கடும் சண்டை நடந்ததாக பேசிக் கொண்டனர். இரண்டு நாள் சடங்கின் இறுதி நாளான நாளை அந்த பூசாரி தனது வீரதீர மந்திர வித்தையால் பேயை விரட்டி விடுவார்! என பேசிக் கொண்டனர். அதே நேரம் அப்படி விரண்டு ஓடும் பேய் வேறு யாரிலும் புகுந்திடாமல் இருக்க சடங்கு நடக்கும் இந்த இரண்டு நாளும் நடுப்பகல் நேரத்திலும் மாலை ஆறுமணிக்கு பிறகும் மக்கள் நடமாட்டத்தை குறைக்க வேண்டுமென பூசாரி கூறியதாக ஒரு மேலதிக வதந்தி பரவியிருந்திச்சு! அதிலும் குறிப்பாக மின்சாரத்துடன் மோதி தனது ஆற்றலை வெளிப்படுத்தியது பற்றி சிலர் மூக்கில் விரல் வைத்து கதைத்தனர்! சிலர் கருப்பான பெரிய உருவம் ஓடியதை கண்டதாக கதை விட்டனர்! எனக்கு எல்லாமே சிரிப்பை ஏற்படுத்திச்சு….. நாளை Climaxe காட்சிகளில் இன்னும் பிரமாண்டத்தை சமூகம் பேசுவது நிச்சயம்.
அன்று பின்னேரம் அஜந்தா எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். அவளது முகத்தில் பிரகாசம் இருக்கவில்லை. என்னோடு முகங்கொடுக்க அவ்வளவு விரும்பவில்லை போல தெரிஞ்சிச்சு. நடந்தவைகள் ஒரு Drama என்பது தெரிந்ததால் அதில் Hitler ஏமாற்றப்படுவதை அவள் முன்னரே விரும்பவில்லை என்பது காரணமாக இருக்குமென நினைத்தேன். நிலமையின் விபரீதம் நான் அவள்மீது கொண்ட காதலுக்கு சிக்கலாக அமைந்தால்…. எனது Invisible heroism waste ஆகிவிடும். அதனால் எப்படியாவது பேச்சு கொடுத்து அவளது நிலைப்பாட்டை தெரிந்திட நினைத்தேன்.
” உன்னோட friend க்கு ஏதாச்சும் பிரச்சினையா?”
என தங்கையிடம் கேட்பது போல பதிலை அவளிடமிருந்து எதிர்பார்த்தேன். எனது முகத்தை பார்த்த பார்த்த விதத்தில் கோபம் தெரிஞ்சிச்சு. அத்துடன்…
“Face to face is a bold step. Cowards always take pleasure in implicit actions” என்றாள்.
அதில் என்னை கோழை என குறிப்பிட்டது வலியுடன் கொஞ்சம் கோபத்தையும் ஏற்படுத்திச்சு.
“There is nothing for me here except I helped you! So who made me a coward?” என சற்று காரமாகவே தங்கை அருகில் இருப்பதையும் உணராமல் சொல்லிவிட்டேன்.
அவளுக்கு அது பேயறைந்தது போல இருந்திருக்கும்…. தங்கை செல்வி முகத்தில் ஈயாடவில்லை.
“சரி சரி தவறு என்னிடம் தான்… இப்போது என்ன செய்வது?” என்றாள் அவள்
“இப்போ எதுவும் செய்வதற்கில்லை. ஆடிய கூத்தை ஆடி முடிப்பது தவிர வேறு வழியில்லை… ஏனென்றால் இடையில் நிறுத்தினால் சரி செய்யவேண்டிய இடங்களும் பாதித்துவிடும்” என்றேன். சற்று நேரம் யோசித்துவிட்டு….
“நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது…. ஏற்றுக் கொள்கிறேன்…. ஆனால்… எல்லோரையும் முட்டாளாக்குவது தான் பிடிக்கவில்லை” என்றாள்.
“எனக்கும் பிடிக்கவில்லை ஆனால் எனக்கு பிடித்தவருக்காக செய்தேன்” என்றேன்.
“I do not understand what you are trying to say” என்றவளிடம்…..
” I think I Love you Ajantha” என தங்கைக்கு முன்னால் வைத்து எனது மனதில் உள்ளதை கொட்டி விட்டேன்.
தொடரும்…..
எம்.யூ.அப்துல் ரஹீம்